10 வயதான பாடசாலை மாணவனுக்கு கொரோனா..! சக மாணவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..
10 வயதான பாடசாலை மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவனுடைய வகுப்பில் உள்ள சக மாணவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த சம்பவம் வவுனியா - கச்சக்கொடி பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 5ல் கல்வி கற்கும் மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்
குறித்த மாணவனும் பாடசாலை சென்றுவந்துள்ளான் இதனால் குறித்த மாணவனின் வகுப்பில் கல்வி பயிலும் சக மாணவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.