SuperTopAds

படையப்பா எழுந்து வா... பாட்ஷா போல் நடந்து வா... -ரஜினி நலம்பெற வேண்டி வைரமுத்து ருவீட்-

ஆசிரியர் - Editor II
படையப்பா எழுந்து வா... பாட்ஷா போல் நடந்து வா... -ரஜினி நலம்பெற வேண்டி வைரமுத்து ருவீட்-

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் திரையுலகின் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த 28 ஆம் திகதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் சிறிய அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் காலை சிகிச்சை மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டது.

தற்போது, அவர் வைத்தியசாலையில் ஓய்வு எடுத்து வருகிறார். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடிகர் ரஜினிகாந்த் காவேரி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ருவிட்டர் பதில்:- காவேரி மருத்துவமனை நிறுவனரிடம் ரஜினியின் நலம் கேட்டேன்; நாளுக்கு நாள் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன, உத்தமக் கலைஞனே காற்றாய் மீண்டு வா, கலைவெளியை ஆண்டு வா, படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா, வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.