யாழ்.ஊர்காவற்றுறை வைத்தியசாலை 2வது தடவையாகவும் தேசியரீதியாக 1ம் இடம்..!
யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை 2வது தடவையாகவும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக (OPD Injury Surveillance) முதல் இடத்தையும் விடுதி நோயாளர் பிரிவில் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
நேற்று (29.10.2021) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை பராமரிப்பு(Secondary care) வைத்தியசாலைகளில் ஊர்காவற்றுறை வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் விருது களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.