SuperTopAds

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நவம்பர் 3ம் திகதிவரை கனமழை! வெள்ள அபாயமும் உண்டு, யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நவம்பர் 3ம் திகதிவரை கனமழை! வெள்ள அபாயமும் உண்டு, யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா..

இலங்கையின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதுடன், தொடர்ந்தும் ஈரப்பதன் மிக்க காற்றை உள்ளீர்ப்பதால் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வரையில் மழை தொடரும்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது. 

கரையோரப் பகுதிகளில் மிக கனமழை கிடைக்கும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும். அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் 

தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அதேவேளை எதிர்வரும் 09.11.2021 அன்று வங்காள விரிகுடா கடற்பகுதியில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.