10ம்,11ம்,12ம்,13ம் தரங்களுக்கான பாடசாலைகள் மீள ஆரம்பம்..! திகதியை அறிவித்துள்ள கல்வி அமைச்சு..

நாடு முழுவதும் சகல பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13ம் வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று கூறியிருக்கின்றார்.
இதன்படி எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி தொடக்கம் குறித்த வகுப்புக்களுக்கான பாடசாலைகள் திறக்கப்படவிருக்கின்றது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன்,
6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.