SuperTopAds

வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய டிப்பர் வாகனம்..! ஆபத்தான நிலையில் முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய டிப்பர் வாகனம்..! ஆபத்தான நிலையில் முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது டிப்பர் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்த ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான பொன்னம்பலம் என்பவரே 

படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டுள்ளதாகவும், இதன்போது பாதசாரி கடவையை பயன்படுத்தாது அதற்கு அண்மித்த பகுதியின் ஊடாக கடக்க முற்பட்டதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பரந்தன் நோக்கி பயணித்த காரினை அவதானித்த குறித்த முதியவர் வீதியில் நின்று தடுமாறிய நிலையில் டிப்பர் வாகனம் மோதியுள்ளது. விபத்தில் குறித்த முதியவரின் கால் துண்டாடப்பட்டுள்ளதுடன், 

தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்ற அவர், 

ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.