“யாழ்” விருது பெறும் வாழ்வகம் அமைப்பின் தலைவர் ஆ.ரவீந்திரன்..!

யாழ்.மாநகரசபையினால் வழங்கப்படும் யாழ் விருது வாழ்வகம் அமைப்பின் தலைவர் ஆ.ரவீந்திரனுக்கு இம்முறை வழங்கப்படவுள்ளது.
நல்லைக்குமரன் மலர் வெளியீடு, யாழ் விருது வழங்கல் குறித்து; யாழ். மாநகர ஆணையாளரும், சைவ சமய விவகாரக் குழுத் தலைவருமான
இ. த. ஜெயசீலன் நேற்று அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில், யாழ்.மாநகராட்சிமன்ற சைவ சமய விவகாரக் குழுவினரால்
நல்லூர் உற்சவ காலத்தில் முன்னெடுக் கப்படும் நல்லைக் குமரன் மலர் வெளியீடும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி
தற்போதைய சூழலில் முழு மையான சுகாதார நடைமுறை களின் கீழ் நடைபெறுவதற்கு திருவருள் கைகூடியுள்ளது.
இம்முறை யாழ் விருதானது சுன்னாகத்தில் அமைந்துள்ள வாழ்வக நிறுவனத் தின் (விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லம்)தலைவரும்
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளருமான ஆ. ரவீந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது - என்றுள்ளது.