திடீர் உடல் நலக்குறைவு!! -ரஜினிகாந்தின் வைத்தியசாலையில்-
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சூப்பஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது இரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலை அவரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், இரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஒரு சில நாட்களில் வைத்தியசாலையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.