SuperTopAds

ஒரே நாடு ஒரே சட்டம் - இதை நான் விமர்சிக்க முடியாது

ஆசிரியர் - Admin
ஒரே நாடு ஒரே சட்டம் - இதை நான் விமர்சிக்க முடியாது

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது. அதனுடைய நோக்கம் என்னவென்று அனைவருக்கும் தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஜனாதிபதியால் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க விரும்பவில்லை. இது கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே.

நானும் வர்த்தமானி மூலம் கோட்டாபயவின் முடிவினை பார்த்திருந்தேன். அவர் எந்த நோக்கத்திற்காக இவரை நியமித்தார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆகவே அவரின் நிலைப்பாட்டினை என்னால் விமர்சிக்க முடியாது என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பற்றி கதைப்பதாக இருந்தால் விரிவாக கதைக்க வேண்டும் இது பல விமர்சனங்களை கொண்டு வரலாம் அதனால் நான் கதைக்க விரும்பவில்லை.

ஞானசார தேரர் பற்றி என்னைவிட ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியும் தானே எனவே இதில் நான் கூறுவதற்கு என்ன இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.