SuperTopAds

நாட்டின் இறையாண்மை பன்னாட்டு நிறுவனங்களிடம்!

ஆசிரியர் - Admin
நாட்டின் இறையாண்மை பன்னாட்டு நிறுவனங்களிடம்!

நாட்டுப்பற்று மற்றும் இறையாண்மை தொடர்பில் அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் இப்போது செயலிழந்திருப்பதன் அவசியப் பன்னாட்டு நிறுவனங்கள் தம்வசப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று முழந்தாளிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

 நாட்டுப்பற்று மற்றும் இறையாண்மை தொடர்பில் அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தற்போது முழுமையாக செயலிழந்து போயுள்ளன.

 இப்போது எமது நாட்டின் இறையாண்மையைப் பன்னாட்டு நிறுவனங்கள் தம்வசப்படுத்திக்கொண்டுள்ளன.  வெளிநாட்டு நிறுவனங்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு இடமளித்துவிட்டு, எதனையும் செய்யமுடியாமல் அரசாங்கம் தவித்துக் கொண்டிருக்கிறது.

 குறிப்பாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச்சென்று முழந்தாளிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  அதுமாத்திரமன்றி இராஜதந்திர நடைமுறைகள் பற்றிய தெளிவின்றி செயற்படும் அமைச்சர்கள், நாட்டின் இறையாண்மையை விளையாட்டுப்பொருளாக மாற்றியிருக்கின்றார்கள்.

 சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பில் தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தற்போது அரசாங்கம் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது.

 பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தரம் குறைந்த உரத்தை நாட்டிற்குக் கொண்டுவரவேண்டியதன் அவசியம் என்ன?  என்று அரசாங்கத்திடம் கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.

 இவ்வாறானதொரு பின்னணியின் நாட்டின் இறையாண்மையுடன் விளையாடுவதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கமுடியாது.  வெளிநாடுகளாலும் தனியார் நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல்கொடுக்கும்.

 கொவிட் - 19 தொற்றுப்பரவல் மூலம் பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது.

 முன்னொருபோதுமில்லாத அளவிற்கு சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.  குறிப்பாக இந்த நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரத்துறையினரால் நாட்டிற்கு ஆற்றப்பட்ட அர்ப்பணிப்பான சேவையை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.