மோசமான குடியிருப்புக்களை வான் வழியாக பார்வையிட்ட வடமாகாண ஆளுநர்! யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பிய புகைப்படம்..

ஆசிரியர் - Editor I
மோசமான குடியிருப்புக்களை வான் வழியாக பார்வையிட்ட வடமாகாண ஆளுநர்! யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பிய புகைப்படம்..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மோசமான குடியிருப்புக்களை வான் வழியாக அவதானிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருக்கின்றார். 

அதன்படி யாழ்.மாவட்டத்தில் மிக மோசமான குடியிருப்பாக அடையாளம் கண்ட பகுதியை புகைப்படம் பிடித்துள்ள ஆளுநர் அதனை யாழ்.மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு அனுப்பிய நிலையில் 

அது குறித்து மாவட்டச் செயலகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. வடமாகாண ஆளுநரினால் மாகாணத்தில் மோசமான குடியிருப்புகளை கொண்ட பகுதிகளை வான் வழியாக 

விரைவாக அவதானிக்கும் திட்டத்தின் கீழ் குறித்த ஒளிப்படம் நடவடிக்கைக்காக யாழ்.மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஒளிப்படம் தொடர்பில் ஆராய்ந்த யாழ்.மாவட்ட செயலகம் அடையாளப்படுத்தப்பட்ட 

வல்லிபுரம் ஐயன் குடியிருப்புப் பகுதியான பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பணித்துள்ளது. இதனடிப்படையில் விடயம் தொடர்பில் ஆராய்ந்த பருத்தித்துறை பிரதேச செயலகம் 

மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/406 ஐயன் வெளிப் பிரதேசம் மழைநீர் மற்றும் நீர்வழங்கல் ஒதுக்கப்பட்ட 

நேரு நீரேந்து பிரதேசம்.குறித்த பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட மூன்று பகுதிகளில் 2017 பின் அத்துமீறிய குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலகப்பிரிவில் 722 குடும்பங்கள் காணியற்றவர்களாகவும் 

1335 குடும்பங்கள் வீடற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஐயன் கோவில் வெளிப் பிரதேசத்தில் அத்துமீறி கூடியிருக்கும் மக்கள் தமது பிரதேச செயலகத்தின் கீழ் குடியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் 

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளோம் என பருத்தித்துறை பிரதேச செயலாளர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு