யாழ்.மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை..! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை..! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு..

தாழமுக்க நிலை காரணமாக யாழ்.மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக 

கடற்கரையினை அண்டிய பகுதியில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு கடல் தொழிலுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் மறு அறிவித்தல் வரும் வரை

அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு