SuperTopAds

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்த 23 இந்திய மீனவர்களுக்கும் நவ.11ம் திகதிவரை விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்த 23 இந்திய மீனவர்களுக்கும் நவ.11ம் திகதிவரை விளக்கமறியல்..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் நவம்பர் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கி்னறது. 

கடந்த 13ஆம் திகதி வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, 

கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்போது சம்பவம் தொடர்பாக

விசாரித்த நீதிபதி,குறித்த மீனவர்கள் 23 பேரையும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றார். படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றது. .