மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் – தீர்வுகளும் பெற்றுக்கொடுப்பு!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் – தீர்வுகளும் பெற்றுக்கொடுப்பு!

மட்டக்களப்பபிற்கான இன்றையதினம் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் வாகரை வட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையை பார்வையிட்டதுடன், குறித்த பண்ணை விஸ்தரிப்பு தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.

இதேவேளை வாகரையில் கடலுடன் களப்பு இணைகின்ற முகத்துவார பிரதேசம் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள மணல் திட்டுக்களை அகற்றி, பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான கள விஜயத்தினையும் கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டார்.

சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற குறித்த பிரதேசத்தில், எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரதேச மக்களினால் எடுத்துரைக்கப்பட்டது

இந்நிலையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வாழைச்சேனை துறைமுகத்திற்கும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு