SuperTopAds

பூநகரி - இரணைதீவு பகுதியில் நாய்களால் கால்நடைகள் அழியும் நிலை...

ஆசிரியர் - Admin
பூநகரி - இரணைதீவு பகுதியில் நாய்களால் கால்நடைகள் அழியும் நிலை...

கிளிநொச்சி - பூநகரி, இரணைதீவு பகுதியில், நாய்களால் கால்நடைகள் உயிரிழந்து வருவதாக, பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இவ்வாறு நாய்களால் கால்நடைகள் உயிரிழக்குமானால், எதிர்காலத்தில், இரணைதீவில் கால்நடைகள் அழிவதற்கான வழிகள் உருவாகும் எனவும், அவர் எச்சரித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இரணைதீவில் பெருமளவு கால்நடைகள் உள்ளன எனவும் இதேவேளை, கடற்படையினர் பல நாய்களை வளர்த்து வருகின்றனர் எனவும் கூறினார்.

இந்த நாய்களால் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக கிராம அலுவலர், கால்நடை வைத்தியர், பூநகரி பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளோம் எனவும் கூறினார்.

கடற்படை அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக பொது மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால் நாய்களால் கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க முடியாது உள்ளது எனவும் கூறினார்.