SuperTopAds

வடமாகாணத்திற்கு 253 மருத்துவ உத்தியோகஸ்த்தர்கள் நியமனம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கு 253 மருத்துவ உத்தியோகஸ்த்தர்கள் நியமனம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

வடமாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 253 மருத்துவ உத்தியோகஸ்த்தர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

இது குறித்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

வடமாகாணத்தில் நீண்ட காலமாக மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளில் மிக மோசமான பற்றாக்குறை காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாடுமுழுவதும் ஒரு தொகுதி மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனத்தில் வடமாகாணத்திற்கு 253 மருத்துவ உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் யாழ்.போதனா மருத்துவமனைக்கு 62 மருத்துவ உத்தியோகத்தர்களும், வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கு 191 மருத்துவ உத்தியோகத்தர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் யாழ்.மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு 57 பேரும், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கு 28 பேரும், 

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு 24 பேரும், மன்னார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு 35 பேரும், 

வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு47 பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.