மாணவர்களுக்கு புத்துணர்வூட்டும் விளையாட்டு மற்றும் இதர பயிற்சிகளுடன் கற்பித்தலை தொடங்குங்கள்! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவுரை..
நாடு முழுவதும் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு புத்துணர்வை வழங்ககூடிய விளையாட்டு மற்றும் ஏனைய பயிற்சிகளுடன் கற்பித்தல் செயன்முறை தொடங்கப்படவேண்டும்.
மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிரக்கின்றார். நேற்றய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்யாலய
ஆரம்பப்பிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபருடன் ஆரம்ப நாளில் கலந்து கொண்டதுடன், மாணவர்களுக்கு புத்துணர்வு வழங்கும் வகையில் விளையாட்டுக்களிலும் பணிப்பாளர் கலந்து கொண்டிருந்தார்.