SuperTopAds

அதிகாரிகள் சிலரின் அசமந்தம்! யாழ்.மாவட்டத்திற்கு கிடைக்கவிருந்த 450 மில்லியன் நிதி கைநழுவும் வாய்ப்பு, ஆளுநரின் தலையீட்டை கோரும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
அதிகாரிகள் சிலரின் அசமந்தம்! யாழ்.மாவட்டத்திற்கு கிடைக்கவிருந்த 450 மில்லியன் நிதி கைநழுவும் வாய்ப்பு, ஆளுநரின் தலையீட்டை கோரும் மக்கள்..

யாழ்.மாவட்டத்திற்கு பால் பதனிடும் நிலையம் அமைப்பதற்காக கிடைக்கவிருந்த சுமார் 450 மில்லியன் ரூபாய் நிதி கால்நடை திணைக்கள அதிகாரிகள் சிலரின் பொறுப்பற்ற செயலாளர் கைநழுவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்த வாய்ப்பை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள் சிலருடைய செயற்பாடு காரணமாக இழக்க முடியாது. 

என வடமாகாண ஆளுநர் இந்த விடயத்தில் தலையீடு செய்து குறித்த திட்டம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் பால் பண்ணையாளர்கள் கோருகின்றனர். பிரான்ஸ் அரசின் உதவியுடன் 

இலங்கையில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்குடன் நிதி வழங்கப்படவுள்ளது. இதன்படி 5 மாவட்டங்கள் குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வடமாகாணத்தில் யாழ்.மாவட்டமே தொிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த திட்டத்தை யாழ்கோ நிறுவனம் ஊடாக செயற்படுத்த முடியும். என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் யாழ்கோ ஊடாக அதனை நடைமுறைப்படுத்த முடியாது 

என வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தால் தொிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டம் கைநழுவி போகும் அபாயம் எழுந்துள்ளது.