வவுனியாவில் ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பமாகின

ஆசிரியர் - Admin
வவுனியாவில் ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பமாகின

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நீண்ட காலத்திற்கு பின்னர் ஆரம்ப பிரிவு மாத்திரம் இன்று ஆரம்பமாகின.

பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததுடன் அதிகளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது.

சில மாணவர்கள் சீருடை அணியாமல் சாதாரண சீருடையுடனும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்ததுடன் பாடசாலை வாயிலில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Radio