ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது!!

ஆசிரியர் - Editor II
ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது!!

தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் சூப்பஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்துள்ளார். 

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கௌவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெற்றிருந்தார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை சூப்பஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கினார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு