பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர்கள் மீது தாக்குதல்..! பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்..

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று (வெள்ளிக்கிழமை) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.