மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை மீறியது மட்டுமல்லாமல் கஞ்சாவும் கடத்தல்! பேருந்து நடத்துனர் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை மீறியது மட்டுமல்லாமல் கஞ்சாவும் கடத்தல்! பேருந்து நடத்துனர் உட்பட இருவர் கைது..

மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் தடையை மீறியது மட்டுமல்லாமல் கஞ்சாவும் கடத்திய பேருந்து நடத்துனர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று சென்றபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கஞ்சாவை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பஸ் நடத்துநர் மருதானையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ 250 கிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (22) காலை 5 மணியளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு