பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து நுாதன போராட்டம்! கழுத்தில் துாக்கு கயிற்றுடன் சபை அமர்வுக்கு சென்ற உறுப்பினர்..

ஆசிரியர் - Editor I
பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து நுாதன போராட்டம்! கழுத்தில் துாக்கு கயிற்றுடன் சபை அமர்வுக்கு சென்ற உறுப்பினர்..

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினை கண்டித்து கரைச்சி பிரதேசசபை அமர்வுக்கு எரிவாயு சிலின்டர்கள், சீமெந்து மற்றும் பால்மாறுடன் சென்று பிரதேசசபை உறுப்பினர் ச.ஜீவராஜா நுாதன போராட்டம் நடத்தியுள்ளார். 

இன்றைய தினம் பிரதேசசபை அமர்வு இடம்பெற்றிருந்த நிலையில்  சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

இதன்போது, மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்தார். பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு