SuperTopAds

விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி வடகிழக்கு விவசாயிகள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி வடகிழக்கு விவசாயிகள் போராட்டம்..!

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்ககோரி வடகிழக்கு மாகாணங்களில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

சமகாலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றது. 

இதன்போது வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், 

உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு -கிழக்கில் உள்ள கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் 

முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.