கட்டுப்பாடற்ற வேகம்! மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மீது மோதி விபத்து, 16 வயதான மாணவன் பலி..
வவுனியா - உலுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி பின்னர் லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
மித மிஞ்சிய வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்தாலேயே விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான்.
விபத்தில் உலுக்குளம் பகுதியை சேர்ந்த ஹன்சா டில்சான் மிகிரிங்க (வயது 16) என்ற சிரசுமன ம.வி. நவோத்தயா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக உலுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.