பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் இரு பிரபலங்கள்?

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் இரு பிரபலங்கள்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரியா பவானி சங்கர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் படத்தின் புரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22 ஆம் திகதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

அப்படத்தின் புரமோஷனுக்காகத் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். அவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு