SuperTopAds

சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு!! -நடிகை உள்ளிட்ட மூவரும் பூமிக்கு திரும்பினர்-

ஆசிரியர் - Editor II
சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு!! -நடிகை உள்ளிட்ட மூவரும் பூமிக்கு திரும்பினர்-

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 12 தினங்களாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டின் நடிகையும், அதை இயக்குபவரும் நேற்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

அண்ட வெளியில் முதலாவது திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் என்ற சாதனையுடன் அவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீரர் ஒலேக் நொவிற்ஸ்கி இவர்களை பாதுகாப்பாக பூமிக்கு மீண்டும் அழைத்து வந்துளமை குறிப்பிடத்தக்கது.