SuperTopAds

உயிரிழந்த 24 வயதான இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று..! யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனையில் முடிவு..

ஆசிரியர் - Editor I
உயிரிழந்த 24 வயதான இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று..! யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனையில் முடிவு..

உயிரிழந்த 24 வயதான இளம் பெண்ணுக்கு இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் உயிரிழந்த 24 வயதான பெண்ணுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தல் இன்று (ஒக்-15) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த உயிரிழந்த பெண்ணின் பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரிகள் 

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் R.றஜீவனா (வயது-24) 

என மருத்துவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.