இந்திய துணைத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு!
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பின் போது வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.