3 ஆவது முறையாக தளபதியுடன் இணையும் நடிகை!!

இளையதளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவர் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.