எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் கூட்டமைப்பு தயார்!
வடக்கு- கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பே வெற்றியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பா.அரியநேத்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், வரவு செலவுத்திட்டம் பூர்த்தியடைந்த பின்னரே மாகாணசபை தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பின் உண்மைத்தன்மையினை அறிந்துகொள்ளமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.