SuperTopAds

வருங்கால கணவர் யார்? -மனம் திறந்த ராஷி கன்னா-

ஆசிரியர் - Editor II
வருங்கால கணவர் யார்? -மனம் திறந்த ராஷி கன்னா-

தமிழில் அண்மையில் வெளியான பல படங்களில் நடித்து பிரபலமாகுயுள்ள நடிகை ராஷி கன்னா, தனது வருங்கால கணவர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது:-எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். 

எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.