வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவருவதாக கூறிச்சென்ற சிறுவனை காணவில்லை!
கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 17 வயதான சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் 17 வயதுடைய சிறுவன் நேற்றுமுன்தினம் (07) காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக
வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். எனினும் சிறுவன் வீடு திரும்பவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தந்தை
பொலிஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.