யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் மீண்டும் அதிகரிப்பு! எழுமாற்று பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதார பிரிவு முஸ்த்தீபு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் மீண்டும் அதிகரிப்பு! எழுமாற்று பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதார பிரிவு முஸ்த்தீபு..

யாழ்.தென்மராட்சி பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக கூறியிருக்கும் சுகாதார பிரிவு நேற்றய தினம் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

8 பேர் அன்டிஜன் பரிசோதனையிலும், மேலும் 3 பேர் பீ.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

மேலும் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் எனவும் சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை தென்மராட்சியில் தினசரி 10 தொடக்கம் 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், குறிப்பாக எழுதுமட்டுவாழ், கொடிகாமம் பகுதிகளில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 

இதனை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் வாரங்களில் எழுமாற்று பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு