வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டாரா? உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதா?

ஆசிரியர் - Editor I
வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டாரா? உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதா?

வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா இன்று நியமனம் செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணைக்குவின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக ஜீவன் தியாகராஜா என்பவரே நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் பதவி ஏற்பு எப்போது என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

ஏற்கனவே வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொடர்ந்தும் தானே பதவியில் இருப்பதாகவும் இது தொடர்பிலான எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது என்றும் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு