SuperTopAds

வடமாகாணத்தில் தேங்கி கிடக்கும் 280 பில்லியன் அமொிக்க டொலர் பெறுமதியான கனிம வளம்..! கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஒத்துழைப்பை கேட்கும் அரசு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் தேங்கி கிடக்கும் 280 பில்லியன் அமொிக்க டொலர் பெறுமதியான கனிம வளம்..! கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஒத்துழைப்பை கேட்கும் அரசு..

நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட எண்ணை வள ஆய்வுகளின்படி மன்னார் வளைகுடாவில் மட்டும் சுமார் 280 பில்லியன் அமொிக்க டொலர் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிம எண்ணை வளம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடனாக 47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போன்றதொரு தொகையே உள்ள நிலையில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளம் உள்ளது. 

அதனை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிருக்கின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இவ்வாறான தேசிய வளத்தை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி 

மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே 

அவர் இதனை கூறினார்.