சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து!! அமீர்கான் காரணமா?
சமந்தா - நாகசைதன்யா ஆகியோரின் பிரிவதற்கு இந்தி நடிகர் அமீர்கான் காரணம் என்று நடிகை கங்கனா ரணாவத் மறைமுகமாக சாடி உள்ளார்.
அமீர்கானை சந்தித்த பிறகே நாகசைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்:-
விவாகரத்து கலாசாரம் முன்பை விட அதிகமாக உயர்ந்து இருக்கிறது. அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்த தென்னிந்திய நடிகர் அந்த பெண்ணை 10 வருடங்களுக்கு மேலாக காதலித்துள்ளார். 4 வருடங்களாக திருமணம் செய்து கொண்டும் வாழ்ந்துள்ளார். இந்த நடிகர் அண்மையில் இந்தியில் விவாகரத்து நிபுணராக பார்க்கப்படுகிற உச்ச நடிகரை சந்தித்துள்ளார்.
அந்த நடிகர் பல பெண்களின் வாழ்க்கையை பாழாக்கி விட்டு இப்போது பலருக்கு அறிவுரை சொல்பவராக மாறி இருக்கிறார். நான் யாரை சொல்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.