சென்னை வெற்றி பெற கைகூப்பி பிரார்த்தனை செய்த டோனியின் மகள்!!
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனியின் மகள் ஜிவா கைகூப்பி பிராத்தனை செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
5 வயதே ஆகும் ஜிவா, தனது தந்தையின் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக விரல் நகங்களை கடித்து பரபரப்புடன் காணப்பட்டார். கண்களை மூடி, கைகூப்பி பிரார்த்தனையும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.