SuperTopAds

பிளே ஓப் வாய்ப்பு யாருக்கு? -கொல்கட்டாவுக்கு அதிக வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
பிளே ஓப் வாய்ப்பு யாருக்கு? -கொல்கட்டாவுக்கு அதிக வாய்ப்பு-

ஐ.பி.எல் ரி-20 தொடரில் 'பிளே ஓப்' சுற்றுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 3 அணிகள்  முன்னேறியுள்ளன. 

மீதமுள்ள ஒரு இடத்துக்கு கொல்கட்டா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், நடப்புச் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4  அணிகளுக்கு இடையில் போட்டி நிரவி வருகின்றது. 

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 12 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 4 ஆவது அணியாக பிளே ஓப் சுற்றுக்கு செல்வதற்கு கொல்கட்டாவுக்கே அதிகப்படியான சாத்தியம் உள்ளது. 

ஏனெனில், கொல்கட்டாவைத் தவிர, ஏனைய 3 அணிகளான பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகள் மறை பெறுமான நிகர ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளன. இவை வெற்றி பெறுவதுடன் பாரிய நிகர  ஓட்ட சராசரியுடன் வெற்றி பெறவேண்டியது முக்கியமாகும். 

எவ்வாறாயினும் இந்த 4 அணிகளும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுவதாயின் ஏனைய அணிகளின் வெற்றி தோல்விகளிலேயே தங்கியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.