திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒக்டோபர் 31ம் திகதிக்கு பின்னர் அமுலாகும் வாய்ப்பு..!
கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்க முடியாதவாறான நடைமுறை அக்டோபர் 31ம் திகதிக்கு பின்னர் அமுலாகவுள்ளது.
தற்போது 50 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு கொரோனா ஒழிப்பு செயலணியிடம் அனுமதி பெற்றுள்ளதாக
அகில இலங்கை சிறிய மற்றும் மத்திய பரிமாண திருமண சேவை வழங்குனர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களின்
வீடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்கவும் தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசேகர தெரிவித்தார்.