பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தது எப்படி? விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தது எப்படி? விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு..

மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலைியல் சம்சுதீன் மொஹமட் றம்ஷான் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்திகள் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தன் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது. 

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய இணைப்பாளர்,த. கனகராஜ் தெரிவிக்கையில், இதன் முதல் கட்டமாக குறித்த இரு நபர்களது கைதுடன் தொடர்புடைய விடயங்களை மன்னார் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான வேண்டுகோள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மற்றொரு நபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி இந்த முறைப்பாடு 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 

பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு