கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தாக்கும் நீண்டகால நோய்கள்..! ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் விடுத்த எச்சரிக்கை..
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு 3 மாதங்கள் தொடக்கம் 6 மாதங்கள் வரையில் 9 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவசுந்தர கூறியுள்ளார்.
சிரமமாக மூச்சு எடுத்தல், வயிற்று நோய் அறிகுறிகள், மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் ஏனைய வலிகள் என 9 விதமான நோய் அறிகுறிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
இந்த நோய் அறிகுறிகளில் மன அழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.சிரமமாக மூச்சு எடுத்தல் :- 8%
வயிற்று நோய் அறிகுறிகள் :- 8%
மன அழுத்தம் :- 15%
நெஞ்சு மற்றும் தொண்டை வலி :- 6%
அறிவாற்றல் பிரச்சினைகள் :- 4%
சோர்வு :- 6%
தலைவலி :- 5%
தசை வலி :- 1.5 %
ஏனைய வலிகள் :- 7%
இந்த நோய் அறிகுறிகளுக்கு உள்ளாவோரில் பெண்களே அதிகம் என அவர் கூறியுள்ளார்.