கணவரை பிரிந்தார் சமந்தா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர். தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.