SuperTopAds

யாழ்.புங்குடுதீவில் அமரர் அம்பிகா செல்லத்தம்பி நினைவாக 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் அமரர் அம்பிகா செல்லத்தம்பி நினைவாக 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது..!

புங்குடுதீவு கிழக்கூரைச் சேர்ந்த அமரர்கள் செல்லத்தம்பி செல்வரத்தினம் தம்பதிகளின் புதல்வி அமரர் செல்வி. அம்பிகா செல்லத்தம்பியின் முப்பத்தோராம் நாள் நினைவாக அவர்களது சகோதரங்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக 

புங்குடுதீவு கிராமத்தில் ஜே- 26 பிரதேசத்தில் கொரோனா சூழ்நிலையால் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் ஐம்பது குடும்பங்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. புங்கையூரின் வழித்தோன்றலான அமரர்களான செல்லத்தம்பி செல்வரத்தினம் 

தம்பதிகளின் புதல்வியான அமரர் அம்பிகா இலங்கைத் தலைநகரில் பிறந்து வாழ்ந்து அமரத்துவமடைந்தவர். அன்னாரின் அமரத்துவமடைந்த முப்பத்தோராம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வினை முன்னிட்டு அமரர் அம்பிகாவின் சகோதரர்களால் 

புங்குடுதீவுக் கிராமத்தில் வசிக்கும் வயோதிபக் குடும்பங்கள், வசதியற்றவர்கள், கொரோனா சூழ்நிலையால் தனிமைப்படுத்தவர்களென சுமார் ஐம்பது குடும்பங்களை அப்பகுதி கிராம சேவையாளர் திரு.சந்திரசேகரம் ஸ்ரீதரனால் தெரிவு செய்யப்பட்டு 

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” தலைவரும், முன்னாள் அதிபருமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்" விசேட அழைப்பை ஏற்று, 

புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் வடமாகாண ஆளுனரின் செயலாளரும், தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான இலட்சுமனண் இளங்கோவன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார். 

சிறப்பு விருந்தினர்களாக அப்பகுதி கிராம சேவையாளர் சந்திரசேகரம் ஸ்ரீதரன், புங்குடுதீவு தெற்கு பலநோக்கு சங்க முகாமையாளர் திருமதி பாலசிங்கம் பொற்பாவை, "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்" செயலாளர் மாணிக்கம் ஜெகன், 

"மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்" பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்" யாழ்.மாவட்ட அமைப்பாளர் விமலதாஸ், கட்டிடக் கலைஞர் வனோஜன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர். 

 "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துடன்" இணைந்து விருந்தினர்களாலும், பயனாளிகளாலும் அமரர்.அம்பிகா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர். கிராமிய இணைப்பாளர் சமூகசேவகர் ராதா தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான

உலருணவுப் பொதிகளையும் வீடுவீடாக சென்று வழங்கி வைத்தார்.