SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பம்..

யாழ்.மாவட்டத்தில் விசேட கவனம் தேவைப்படும் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.                  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் 

பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் 

மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும்.வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.