வடக்கில் தடுப்பூசி அட்டை பரிசோதனை செய்யும் நடவடிக்கை அதிகரிப்பு! தடுப்பூசி அட்டை இல்லாவிட்டால் அன்டிஜன் பரிசோதனை..
வவுனியா - நெடுங்கேணி பகுதியில் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி பெறாதோர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில், இன்று (புதன்கிழமை) வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர், நெடுங்கேணி பொலிஸாருடன் இணைந்து நெடுங்கேணி நகரில் மக்களின் தடுப்பூசி அட்டைகளை பரிசோதனை செய்துள்ளார்கள்.
குறித்த தரப்பினரின் பரிசோதனை நடவடிக்கையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கொரோனா தொற்று ஆபத்தை கூடுதலாக கொண்டிருப்பவர்கள் என அடையாளப்படுத்தி அவர்களுக்கும்,
நெடுங்கேணி நகர வர்த்தக நிலைய ஊழியர்களிற்கும் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.