யாழ்.சுதுமலையில் மாறுவேசத்தில் தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு குழு ரவுடி உட்பட 3 பேர் கைது..! இன்னும் சில நாட்களில் வெளிநாடு செல்ல இருந்தவராம்..
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு ரவுடி 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றான்.
குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் - கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து
கோமாவில் இருந்து சிகிச்சை பலன்றி இறந்த வழக்கில் பிரதான சந்தேகநபர், மற்றும் இவருக்கு யாழ்.நீதிமன்றில் இரண்டு பிடியாணைகள் உள்ளதாகவும், வினோதன் வீடு, அகிலசுமன் வீடு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிரதானசுத்திரதாரி
எனவும், ராஐா கிறீம் கவுஸில் மோட்டார் சைக்கிலை பறித்து சென்றவரும் இவரே என கூறப்படுகின்றது. மேலும் குறித்த ரவுடியின் தாய் வெளிநாட்டில் இருப்தாகவும் அவரின் உதவியுடன் ஓரிரு மாதத்தில் இலங்கையை விட்டு தப்பிக்க இருந்த நிலையில்,
இன்று குறித்த நபர் மாறுவேடத்தில் அடையாளம் காணாதவாறு உருமாற்றம் செய்து தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய் சுதுமலையில் வைத்து இவருடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.