SuperTopAds

சி.எஸ்.கே 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

ஆசிரியர் - Editor II
சி.எஸ்.கே 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் நாணய சூழல்ச்சியில் வென்ற  கொல்கத்தா அணியின் தலைவர் மோர்கன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்

இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட களம் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 40 ஓட்டங்களும், டூ ப்ளஸ்ஸி 43 ஓட்டங்களும்  எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடிய கெய்க்வாட் 28 பந்துகளில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் விளாசி 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஜடேஜா அதிரடியாக ஆடி சென்னையை அணியை வெற்றி பெற செய்தார்.  சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.