உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடை உத்தரவுடன் சென்ற பொலிஸ்!

ஆசிரியர் - Admin
உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடை உத்தரவுடன் சென்ற பொலிஸ்!

தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த கட்டளையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் இன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது இதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி பொலிஸாரை திரும்பி அனுப்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு