வடக்கில் 24 நாட்களில் 310 கொரோனா மரணங்கள் பதிவு! யாழ்.மாவட்டத்தில் அதிக பாதிப்பு, நேற்றய தினம் மட்டும் 108 பேருக்கு தொற்று, 8 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் 24 நாட்களில் 310 கொரோனா மரணங்கள் பதிவு! யாழ்.மாவட்டத்தில் அதிக பாதிப்பு, நேற்றய தினம் மட்டும் 108 பேருக்கு தொற்று, 8 மரணங்கள் பதிவு..

வடமாகாணத்தில் இம் மாதம் 24ம் திகதிவரை சுமார் 8401 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் 310 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

இதனடிப்படையில் நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ்.மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் 

முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்று யாழ்.மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 719 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்.மாவட்டத்தில் 

16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 634 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

228 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு